சூலூர் பகுதியில் 1.3 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்

சூலூர் பகுதியில் 1.3 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்
X

Coimbatore News- கைது செய்யப்பட்டவர்.

Coimbatore News- கஞ்சா சாக்லேட்யை விற்பனைக்கு வைத்திருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சீதகாந்தா நாயக் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Coimbatore News, Coimbatore News Today- கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இன்று சூலூர் அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் குரும்பபாளையம் அருகே சென்று காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா சாக்லேட்யை விற்பனைக்கு வைத்திருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சீதகாந்தா நாயக் (23) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல் துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 67 நபர்கள் மீது 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் 94.845 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story
சத்தியமங்கலத்தில் விசிக ஆர்ப்பாட்டம்...! அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்கள்..!