கோவையில் 40 லட்சம் மதிப்பிலான நகை பணம் கொள்ளை

கோவையில் 40 லட்சம் மதிப்பிலான   நகை பணம் கொள்ளை
X

கொள்ளை நடந்த வீடு

Coimbatore Jewel Cash Robbery கத்தியைக் காட்டி மிரட்டி 40 இலட்ச ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore Jewel Cash Robbery

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருபவர் முகமது. இவர் பீளமேடு புராணி காலனி பகுதியில் தனது தந்தை, மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் வாசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் அவரது வீட்டில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி உள்ளது.

மேலும் வீட்டில் இருந்த ஐந்து பேரையும் கட்டி போட்டு அங்கிருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி உள்ளனர். மெக்கா செல்வதற்காக 10 லட்சம் ரூபாய் பணத்தை அவர் பீரோவில் வைத்திருந்த நிலையில் அந்த பணத்தை கொள்ளையடித்த கும்பல், பிரோவிலிருந்த சுமார் 20 சவரன் தங்கம், வைர நெக்லஸ், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரம் உட்பட சுமார் 40 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பியோடினர்.

வீட்டின் காவலாளி விடுப்பில் இருந்ததால் கடையில் வேலை பார்க்கும் நபரை காவலுக்கு அமர்த்திய நிலையில், அவர் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கியதால் சம்பவம் நடந்தது எதுவும் தெரியாமல் இருந்துள்ளது. மேலும் கடையில் பணியாற்றுபவர்களுக்கு ஊதிய தொகை கொடுப்பதற்காக வைத்திருந்த தொகையும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.இதனைத்தொடர்ந்து கொள்ளையர்கள் அங்கிருந்து வெளியேறிய பிறகு வீட்டில் இருந்தவர்கள் சத்த மிட்டதால், அங்கு வந்த அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற பீளமேடு காவல் துறையினர் சம்பவ இட்டத்தில தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!