கோவை கல்லூரி விழாவில் பங்கேற்று நடனமாடிய நடிகர் ஜெயம் ரவி

கோவை கல்லூரி விழாவில் பங்கேற்று நடனமாடிய நடிகர் ஜெயம் ரவி
X

கோவை கல்லூரி விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் ஜெயம்ரவி.

கோவை கல்லூரி விழாவில் நடிகர் ஜெயம் ரவி பங்கேற்று நடனமாடினார்.

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஜெயம்ரவி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளிடையே சிறப்புரையாற்றிய நடிகர் ஜெயம்ரவி, ”இந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட அவர், என்னுடைய காதலர் தினத்தை விட்டு விட்டு இங்கு வந்துள்ளேன். எனக்கு நீங்கள் அனைவரும் ஒரு உறவாக இருக்கிறீர்கள். வருங்காலம் பின்னால் ஓடாதீர்கள் இப்போது இருக்கின்ற மாதிரி மகிழ்ச்சியாக இருந்தாலே வருங்காலம் உங்களை தேடி வரும். தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் தப்பில்லை, ஆனால் வாழ்க்கையில் தேர்ச்சி பெறாமல் போனால் தான் தப்பு” எனத் தெரிவித்தார்.

அவரிடம் காதலர் தினம் குறித்து கருத்து கேட்டதற்கு, ”18 வயது நினைவுகளை நினைவுப்படுத்தினால் 18 வயதில் ஒரு இன்னொசென்ஸ் இருக்கும். அது காதலில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். காதல் அனைத்தையும் கடந்த ஒன்று அனைவரையும் மதிக்க வைக்கிறது” என்றார்.

18 வயதில் ரசித்த காதல் பாடல் என்ன என்ற கேள்விக்கு, சிங்கிள் சைடு காதல் இருந்த போது ரசித்த பாடல் என்னவென்றால் ’மஞ்சம் வந்த தென்றலுக்கு’ என்ற பாடல் என பதிலளித்து அந்த பாடலை பாடினார். திருமணம் குறித்தான கேள்விக்கு, ”ஏன் திருமணம் செய்கிறோம் என்றால் உன்னுடைய வாழ்க்கையை உன்னுடன் வாழந்த பெண் சொல்ல வேண்டும். அது தான் வாழ்க்கை அதற்கு தான் திருமணம்” எனக் கூறினார்.

பின்னர் மாணவர்களின் கோரிக்கைக்கிணங்க மேடையில் நடனமாடினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”கோவை வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சைரன் படம் மிக முக்கியமான படம். குடும்பத்திற்காக இந்த படம் செய்துள்ளேன். இந்த படம் எனக்கு சவாலாக தான் இருந்தது. 15 ஆண்டுகால வித்தியாசங்களை இதில் அனைவரும் காண்பித்துள்ளோம். எனவே இந்த படம் ஒரு ஆர்கானிக் ஆக வந்துள்ளது” என்றார்.

Tags

Next Story
why is ai important to the future