ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் காட்சி.
கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணைக்கட்டு. இந்த அணைக்கட்டில் சேமிக்கப்படும் நீரின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஆழியார் அணையால் பாசனம் பெறும் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள பயிர்களை காப்பாற்ற ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிஏபி தொகுப்பு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஆழியார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது ஆழியார் அணையின் நீர்மட்டம் 82.35 அடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆழியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடபட்டது. ஜனவரி பத்தாம் தேதி முதல் மார்ச் மாதம் 10 ம் தேதி வரை உள்ள 60 நாட்களில் 30 நாட்களுக்கு 350 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தினமும் 125 கன அடி முதல் பாசன நீர் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்த விட அரசு உத்தரவிட்டது.
இதனயைடுத்து ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். காரப்பட்டி, அரியாபுரம், பெரியணை, வடக்கலூர் ஆகிய பழைய ஆயக்கட்டு பாசன வாய்க்கால் மூலம் ஆனைமலை டெல்டா பகுதியில் உள்ள 6400 ஏக்கரில் உள்ள நிலை பயிர்கள் பாசன பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu