பொள்ளாச்சி அருகே விவசாயி வெட்டி கொலை ; போலீசார் விசாரணை

பொள்ளாச்சி அருகே விவசாயி வெட்டி கொலை ; போலீசார் விசாரணை
X

Coimbatore News- கொலை நடந்த இடம்

Coimbatore News- குடும்ப தகராறை தடுக்க சென்ற விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூர் சித்தாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இப்பகுதிக்கு அருகில் உள்ள தோட்டத்து சாலையில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன் (59). இவரது மனைவி சரஸ்வதி (48). இவர்களுக்கு சொந்தமான தோட்டம் விற்கப்பட்டது சம்பந்தமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு இருவருக்கும் இடையே மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அதே பகுதியில் பக்கத்து தோட்டத்தில் வசிக்கும் சிவக்குமார் (36) என்பவர் அங்கு சென்றுள்ளார். இருவருக்கும் இடையேயான தகராறை சிவகுமார் தடுக்க முயன்றுள்ளார். அப்போது சிவகுமாரை ராதாகிருஷ்ணன் தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சிவகுமார், ராதாகிருஷ்ணனை வழியாக அரிவாளால் சராமரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த ஆனைமலை காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிவக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து ராதாகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டதற்கு வேறு காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் அவரது மனைவி சரஸ்வதி உள்ளிட்ட உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறை தடுக்க சென்ற விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!