‘கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. கோபாலபுரத்து அடிமைகள்’ -முன்னாள் அமைச்சர் வேலுமணி

‘கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. கோபாலபுரத்து அடிமைகள்’ -முன்னாள் அமைச்சர் வேலுமணி
X

கோவையில் நடைபெற்ற அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.

விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகள் கோபாலபுரத்து அடிமையாக உள்ளன என முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறினார்.

பட்டியலின மாணவி மீது தாக்குதல் நடத்திய பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணமான தி.மு.க அரசை கண்டிப்பதாகவும் கூறி இன்று அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் மூன்று இடங்களில் இந்த ஆர்ப்பாட்டமானது நடத்தப்பட்டது.

கோவை மாநகர் மாவட்டம், புறநகர் தெற்கு மாவட்டம், புற நகர் வடக்கு மாவட்டம் சார்பில் தனித்தனியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அ.தி.மு.க. புறநகர் மாவட்டம் சார்பில் பட்டியிலன பெண் மீது வன்கொடுமையை கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”தி.மு.க.வுடன் இருக்கும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகள் கோபாலபுரத்து அடிமையாக உள்ளன. வேங்கை வயல் சம்பவம், பட்டியலின பெண்கள் மீது தாக்குதல் என தொடர்ந்து நடந்தாலும், தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் அமைதியாக உள்ளன. பட்டியலின மாணவி மீது தாக்குதல் நடத்திய திமுக எம்எல்ஏ மீது முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில், கொடூர கொலைகள் நடைபெற்று வருகிறது. இதை கண்டிக்கும் விதமாக திமுக அரசைக் கண்டித்து கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது” என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!