காவல் துறையினர் குடும்பத்துடன் இணைந்து கொண்டாடிய பொங்கல் விழா

காவல் துறையினர் குடும்பத்துடன் இணைந்து கொண்டாடிய பொங்கல் விழா
X

-Coimbatore News- பொங்கல்  கொண்டாட்டத்தில் , போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Coimbatore News- காவல் துறையினர், காவல் துறையினரின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.

Coimbatore News, Coimbatore News Today- தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வோடு அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய பாரம்பரியமிக்க பண்டிகையாக இருந்து வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் வெகு விமர்சையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் நடந்த இந்த விழாவில், காவல் துறையினர், காவல் துறையினரின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் கலந்து கொண்ட காவல் துறையினர், காவல் துறையினரின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். குழந்தைகள் மற்றும் காவல் துறையினரின் குடும்பங்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசுகளை வழங்கினார்.

மேலும், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் பணி புரியும் நிறைமாத கர்ப்பிணியான பெண் காவலருக்கு அனைவரும் இணைந்து வளைகாப்பு விழாவும் நடத்தினர். இவ்விழாவில் கலந்து கொண்ட காவல் துறையினர், காவல் துறையினரின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!