கோவில்பாளையத்தில் 34 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்

கோவில்பாளையத்தில் 34 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்
X

கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

கஞ்சா சாக்லேட்யை விற்பனைக்கு வைத்திருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சயகுமார் சமலை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில், கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீரணத்தம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் கீரணத்தம் அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது, கஞ்சா சாக்லேட்யை விற்பனைக்கு வைத்திருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சயகுமார் சமல் (40) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து ரூபாய் 1 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 34 கிலோ கிராம் கஞ்சா சாக்லேட்டை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!