கோவை விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள் பறிமுதல்
X

Coimbatore News- தங்கக்கட்டிகள் பறிமுதல்

Coimbatore News- கோவை விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Coimbatore News, Coimbatore News Today- கோவை பீளமேடு பகுதியில் கோவை பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள் நாட்டு விமானங்களும், சர்ஷா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தி வருவதை தடுக்க பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து இன்று காலை ஏர் அரேபியா விமானம் கோவை விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் தங்கக் கட்டிகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டனர். பின்னர் விமானத்தின் உட்பகுதியிலும் சோதனை ஈடுபட்டனர். அப்போது விமான இருக்கை ஒன்றின் பக்கவாட்டில் இருக்கும் உட்பக்க பேனலில் மூன்று பாக்கெட்டுகளில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதனையடுத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகளை பரிசோதித்த போது, 1399 கிராம் எடையில் தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil