கோவை அருகே நோய் காரணமாக பெண் காட்டு யானை உயிரிழப்பு
கோவை அருகே உயிரிழந்து கிடந்த காட்டு யானை.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட தடாகம் அருகே உள்ள மாங்கரை சராக வனப்பகுதியில் பகுதியில் வனத்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வனப்பகுதிக்கு வெளியே வனப்பகுதியில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள வனத்திற்குள் இருந்து வருகின்ற மாங்கரை ஓடை பகுதியில் ஒரு பெண் காட்டு யானை ஒன்று படுத்த நிலையில் தென்பட்டது.
இதையடுத்து வனபணியாளர்கள் அருகே சென்று தணிக்கை செய்த போது யானை இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வன கால்நடை அலுவலர் இறந்த பெண் யானையை உடற்கூறு ஆய்வு செய்தார். உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் இறந்த பெண் யானையானது சுமார் 35 முதல் 38 வயது இருக்கக்கூடும் எனவும், நுரையீரல் பாதிப்பு மற்றும் பல்வேறு உடல் உள்ளுறுப்புகளின் செயலிழப்பு காரணமாக இறந்துள்ளது எனவும் தெரியவந்தது. மேலும் ஆய்விற்காக உடற்கூறுகள் எடுக்கப்பட்ட நிலையில், ஆய்வக முடிவுக்கு பின் இறப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். காட்டு யானை உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu