ஆட்சியர் அலுவலகத்தில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய பெண்ணால் பரபரப்பு

ஆட்சியர் அலுவலகத்தில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய பெண்ணால் பரபரப்பு
X

கத்தியை வைத்து மிரட்டிய மரகதவள்ளி

தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கழுத்தை அறுத்துக் கொள்வேன் என மரகதவள்ளி மிரட்டல் விடுத்தார்.

கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த மரகதவள்ளி. 38 வயதான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாரியம்மாள், சக்தி, தேவா, சுகா ஆகியோருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தன்னை ஆபசாமாக பேசி மிரட்டல் விடுத்தாகவும், தன்னையும், தனது வீட்டையும் தாக்கியதாக பேரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார். இந்த புகாரின் பேரில் இதுவரை வழக்கு செய்யப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த மரகதவள்ளி கையில் கத்தியுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வந்தார்.

இதனை பார்த்த அங்கிருந்த காவல் துறையினர் உடனடியாக அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது திடீரென தனது கழுத்தில் கத்தியை வைத்து, தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கழுத்தை அறுத்துக் கொள்வேன் என மரகதவள்ளி மிரட்டல் விடுத்தார்.

காவல் துறையினர் அவரை சுற்றி வளைத்து சமாதப்படுத்த முயன்ற நிலையிலும், அவர் சமாதானமாகவில்லை. இதனை தொடர்ந்து காவல் துறையினர் அந்த பெண் வைத்திருந்த கத்தியை பிடுங்கி விட்டு அவரை பந்தய சாலையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் கையில் வைத்திருந்த கத்தி பட்டதில் காவலர் ஒருவர் கையில் லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து பந்தய சாலை காவல் நிலையத்திற்கு மரகதவள்ளியை அழைத்துச் சென்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டிய பெண்ணால் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி