பூம்புகார் விற்பனை நிலையத்தில் ரூ.1.44லட்சம் பணம் கொள்ளை

பூம்புகார் விற்பனை நிலையத்தில் ரூ.1.44லட்சம் பணம் கொள்ளை
X

Coimbatore News- பூம்புகார் விற்பனை நிலையம்

Coimbatore News- பூம்புகார் விற்பனை நிலையத்தில் ரூ.1.44லட்சம் பணம் கொள்ளை போனதால் பரபரப்பு ஏற்பட்டது.

Coimbatore News, Coimbatore News Today- கோவை டவுன்ஹால் பகுதியில் தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் அங்காடியான பூம்புகார் விற்பனையகம் இயங்கி வருகிறது. வழக்கம் போல இரவு விற்பனை நிலையத்தை பூட்டி விட்டு சென்ற மேலாளர் ஆனந்தன், மறுநாள் விற்பனை நிலையத்தை திறப்பதற்காக வந்துள்ளார். விற்பனை நிலையத்திற்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பூட்டை ரம்பத்தால் அறுத்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே வருவதும், பின்னர் ரூபாய் 1,44,877 பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் ஆனந்தன் இந்த கொள்ளை சம்பவம் குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் உக்கடம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் டவுன்ஹால் பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் புற காவல் நிலையத்திற்கு முன்பு இந்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு