கோவையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் கைது

கோவையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் கைது
X

நைஜீரியாவை சேர்ந்தவர் கைது

போதிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததற்காக கைது செய்த காவல் துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த எம்மா (எ) இமானுவேல் என்பவர் மூச்சுத்திணறல் பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் முறையான பாஸ்போர்ட் மற்றும் விசா தகவல்களை தரவில்லை எனவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் மருத்துவமனைக்கு சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, இந்தியாவிற்கு வந்தது மற்றும் இங்கு தங்கி இருப்பது பற்றியும், அவருடைய பாஸ்போர்ட் மற்றும் விசா தொடர்பான தகவல்களை முறையான தகவல்களை தரவில்லை என்பதும் தெரியவந்தது. . இதையடுத்து அவர் மீது பந்தய சாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் அவர், நைஜீரியாவில் இருந்து வந்து மும்பையில் தனது நண்பர்களுடன் தங்கியிருந்து மும்பை மற்றும் திருப்பூர் மாநகரில் உள்ள பல இடங்களுக்கு சென்று டி-ஷர்ட்களை மலிவு விலைக்கு வாங்கி இங்கிருந்து நைஜீரியாவிற்கு ஏற்றுமதி செய்து வந்தது தெரியவந்தது.

அவரது பாஸ்போர்ட் மற்றும் விசா பல வருடங்களுக்கு முன்பே காலாவதியானதும், சட்ட விரோதமாக இந்தியாவில் அவர் குடியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சை முடித்து வெளியே வந்த அவரை போதிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததற்காக கைது செய்த காவல் துறையினர், சிறையில் அடைத்தனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கோவை மாநகரில் இதுபோன்று முறையான பாஸ்போர்ட் மற்றும் விசா ஆவணங்கள் இல்லாமல் தங்கி உள்ள வெளிநாட்டவர்கள் குறிப்பான தகவல்களை திரட்டவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!