கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட மைவி3 நிறுவன ஆதரவாளர்கள் கைது..!

கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட மைவி3 நிறுவன ஆதரவாளர்கள் கைது..!
X

சக்தி ஆனந்த் கைது

காவல் துறையினர் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும், கலைந்து செல்லாததால் காவல் துறையினர் கைது செய்தனர்

மைவி 3 ஏட்ஸ் நிறுவனம் குறித்து அவதூறாக பேசி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அந்நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் தலைமையில் 200 க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து பேசிய சக்தி ஆனந்த், ”கடந்த 31 மாதமாக முறையாக நிறுவனம் நடத்தி வருகிறேன். இதுவரை யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் அளிக்கவில்லை. சிலர் அளித்த பொய்யான புகார் குறித்து காவல் துறையினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன்.

சில யூடுபர்ஸ் 20 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். வருகின்ற திங்கட்கிழமை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் புகார் மனு அளிக்க உள்ளோம். தவறான செய்தி வெளியிடும் யூடுபர்ஸ் வீடுகளை முற்றுகையிடுவோம். விசாரணையில் நல்லவன் என நிரூபிப்பேன். முகாந்திரம் இல்லாமல் மோசடி செய்ததாக பேசக்கூடாது. இதனால் 60 இலட்சம் பேர் வாழ்க்கை பாதிக்கப்படும். என் மீதான குற்றம் நிரூபிக்கும் வரை அவதூறு பேசக்கூடாது” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து கோவை மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து மனு அளித்த பிறகே, கலைந்து செல்வோம் என மை வி3 ஏட்ஸ் ஆதரவாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும், கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட சக்தி ஆனந்த் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது மைவி 3 நிறுவனத்திற்கு ஆதரவாக போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!