காவலர்கள் ரோந்து செல்ல எலக்ட்ரிக் ஆட்டோக்கள் ; காவல் ஆணையாளர் துவக்கி வைப்பு..!
எலக்ட்ரிக் ஆட்டோ பயன்பாட்டை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ரோந்து பணிக்காக எலக்ட்ரிக் ஆட்டோக்கள் தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஆட்டோக்கள் சிறிய பாதைகளில் எளிதாக செல்வதற்கும் அசம்பாவிதங்கள் நடைபெற்ற இடங்களில் பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் ஆட்டோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சைரன் ஹாரன் ஒலி பெருக்கி உடன், கேமரா வசதிகளுடனும் ஆறு பேர் அமர்ந்து செல்லும் வகையில் இந்த ஆட்டோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மிக நெருக்கமான பகுதிகளில் இந்த ஆட்டோவை பயன்படுத்த இருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஐந்து ஆட்டோக்களின் பயன்பாட்டை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் தன்னார்வ தொண்டு அமைப்பினரும் பங்கு பெற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ரோந்து பணிக்காக 5 எலக்ட்ரானிக் ஆட்டோக்களை தனியார் நிறுவனங்கள் அர்ப்பணித்துள்ளது. முதல் கட்டமாக இந்த ஐந்து ஆட்டோகளை காவல் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டு ரோந்து பணியை தீவிர படுத்த உள்ளோம்.
மேலும் இதில் பல்வேறு வசதிகள் இருப்பதாகவும், காவல் துறைக்கு பயன்படும் வகையில் இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் வடவள்ளி, கரும்புக்கடை உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்ப இருப்பதாகவும், காவலர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆட்டோவிலிருந்து பொதுமக்களிடம் பேசுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. குறுகலான பாதைகளில் சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். இந்த ஆட்டோக்களை 30 லட்சம் மதிப்பில் தனியார் நிறுவனம் சார்பாக காவல் துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu