கொத்தடிமை முறை ஒழிப்பு தினம் ; விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய காவல் ஆணையாளர்
Coimbatore News- விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய ஆணையாளர் பாலகிருஷ்ணன்
Coimbatore News, Coimbatore News Today- ஆண்டுதோறும் பிப்ரவரி 9ம் தேதி கொத்தடிமை முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசு சார்பில் கொத்தடிமை முறை ஒழிப்பு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாளை கொத்தடிமை முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், கோவையில் மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் துறையினர், ரயில்வே காவல் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடையே கொத்தடிமை ஒழிப்பு தினத்தை பற்றியும் கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
மேலும் அங்கிருந்த வடமாநில மக்களிடமும் ஹிந்தி மொழியில் உரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், பெற்றோர் செய்ய வேண்டிய விஷயங்கள், குழந்தைகளின் உரிமைகள், குழந்தை தத்தெடுத்தல் விவரங்கள், குழந்தை திருமணம் தடுத்தல் பற்றிய விவரங்கள் அடங்கிய பிரசுரங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கொத்தடிமை ஒழிப்பு தினம் தொடர்பான விழிப்புணர்வு ரயில் பயணிகளிடம் ஏற்படுத்தப்பட்டது. மைவி 3 நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோல எந்த நிறுவனமும் நடத்த அனுமதியில்லை. விசாரணை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu