கோவை அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
பட்டியலின மாணவி மீது தாக்குதல் நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், சட்ட ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணமான தி.மு.க அரசை கண்டிப்பதாகவும் கூறி இன்று அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் மூன்று இடங்களில் இந்த ஆர்ப்பாட்டமானது நடத்தப்பட்டதது.
கோவை மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம், புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் தனித்தனியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது பட்டியல் இன மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், சமத்துவம் பேசும் திமுக தனிப்பட்ட முறையில் தீண்டாமையை பின்பற்றி வருவதாக குற்றம் சாட்டினார். அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் பணியாற்றிய மாணவியை சட்டமன்ற உறுப்பினரின் மகன் மற்றும் மருமகள் இணைந்து கொடூரமாக சித்ரவதை செய்ததாக அவர் குறிப்பிட்டார். அதற்காக வழக்கு பதிவு செய்யக்கூட காவல்துறை முன் வரவில்லை எனவும், தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும் கோவை மாநகரில் எங்கும் குப்பைகள் எடுக்கப்படுவதில்லை எனவும், குப்பை நகரில் நாம் வசித்து வருகிறோம் எனவும் கூறிய அவர், குப்பைக்கு விருது வழங்க வேண்டும் என்றால் கோவை தான் முதலிடம் பிடிக்கும் என விமர்சித்தார். மேலும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கோவை மாநகராட்சி பல்வேறு விருதுகளை பெற்றதாகவும், தற்போது தமிழக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளில் இதுவரை ஒரே ஒரு விருது மட்டுமே கோவை மாநகராட்சி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu