கோவையில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கோவையில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
X

Coimbatore News- கோவையில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது ( மாதிரி படம்)

Coimbatore News- கோவையில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் தடாகம் காவல் நிலைய பகுதியில் 12 கிலோ கஞ்சாவைவிற்பனைக்கு வைத்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த முருகன் (69) என்பவரை தடாகம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக முருகன்(69) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் முருகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

இதேபோல கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய பகுதியில் 11 கிலோகிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ராஜேந்திர பிரசாத் (64) என்பவரை மதுக்கரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளியான ராஜேந்திர பிரசாத் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்த சதீஷ் (34) என்ற நபர் அதே பகுதியைச் சேர்ந்த ரேணுகா (40) என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக சதீஷ் (34) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் சதீஷ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 28 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil