1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பைல் படம்
தமிழகத்தில் வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் 1ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கி முதல்வர் ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி ஏற்கனவே 9-12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்காக பள்ளி மற்றும் கல்லுாரிகளும் இயங்கி வருகின்றன.
அதேபோல், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகவும்.
மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும், 1-8 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான வகுப்புகள் கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நவம்பர் 1 ஆம் தேதி முதல் நடத்த அனுமதிக்கப்படும்.
அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிகல்வித்துறை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்.31 வரை நீட்டிப்பு தமிழகத்தில் வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக, கோவிட் தொற்று பரவக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு, அதனை கட்டுப்படுத்தும் வகையில் அக்.31 ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்த அனுமதி பொதுமக்கள், தங்களது குறைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் ஆகியவற்றை கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu