வியாசர்பாடியில் கோயிலுக்குச் சென்ற மூதாட்டியிடம் தாலிச்சங்கிலி பறிப்பு

வியாசர்பாடியில் கோயிலுக்குச் சென்ற மூதாட்டியிடம்  தாலிச்சங்கிலி பறிப்பு
X
இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர்

கோயிலுக்குச் சென்ற மூதாட்டியிடம் தாலிச்சங்கில் பறித்துச்சென்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 4வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன்(70.) இவர் சென்னை மாநகர போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மல்லிகா( 63 ). இவர் நேற்று காலை 7 மணியளவில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சர்மா நகர் முதல் மெயின் ரோடு வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். மல்லிகா கூச்சலிட்டதால் அருகிலிருந்தோர் ஓடிவந்து மல்லிகாவை மீட்டு எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக எம்கேபி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
Similar Posts
சோழவரம் அருகே சோலிப்பாளையத்தில் புதிய மின்மாற்றியை திறந்த எம்எல்ஏ
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
மழை நீர் வீடுகளை  சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்
மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய பூசாரியை காப்பாற்றிய பொதுமக்கள்
ஓடிடியில் வேட்டையன்! இவ்ளோ சீக்கிரமாவேவா?
செங்குன்றம் அருகே இராமானுஜர் உற்சவர் மூர்த்தி பிரதிஷ்டை விழா
அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் அஜித்குமார் திரைப்படங்கள்..! முதல்ல எது தெரியுமா?
சாம்சங் தொழிலாளர் போராட்டம்: பணிக்குத் திரும்ப வேண்டுகோள் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
மகளிர் விடுதிகளுக்கு எச்சரிக்கை: நவம்பர் 15க்குள் இதை செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை!
புழல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை, மகன், தாய் கைது
BiggBoss Tamil முதல் நாள் முதல் ஆளாக வெளியேறிய விஜய்சேதுபதி மகள்..!
சென்னை கோயம்பேடு கழிவு நீர் தொட்டியில்  குதித்து சிறுவன் தற்கொலை
ரஜினியை இயக்கும் மணிரத்னம்! உண்மை என்ன?
ai in future agriculture