சென்னையில் ஆட்டோ டிரைவர் காதை கடித்த போதை வாலிபர்

சென்னையில் ஆட்டோ டிரைவர் காதை கடித்த போதை வாலிபர்
X
சென்னையில் ஆட்டோ டிரைவர் காதை கடித்த போதை வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை எம்கேபிநகர் 12வது மத்திய குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பிரேம்குமார்(44). இவரது பக்கத்தை வீட்டை சேர்ந்தவர் தமிழ்(30). இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு குடிபோதையில் பிரேம்குமார் வீட்டுக்கு வந்த தமிழ், தன்னுடைய மனைவி குளோரி என்னை விட்டு பிரிந்து சென்றதற்கு நீ தான் காரணம் என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இதனை தடுக்க வந்த பிரேம்குமாரின் மனைவி ஸ்வேதாவை தாக்கி கீழே தள்ளினார். அப்போது எதிர்பாராத நேரத்தில் அவர் பிரேம்குமாரின் காதை கடித்து துப்பினார். இதில் பிரேம்குமார் காதில் ஒரு பகுதி தனியாக வந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் பிரேம்குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!