மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை குண்டர் சட்டத்தில் சிறை

மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை குண்டர் சட்டத்தில் சிறை
பைல் படம்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

செந்துறை அருகேயுள்ள இலங்கைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன்(43). தனியார் பட்டறைகளில் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவர் கடந்த அக்டோபர் மாதம் அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், அரியலூர் அனைத்து மகளிர் போலீஸார், போக்ஸோவில் சுப்பிரமணியனை கைது செய்தனர்.

இந்நிலையில் மாவட்ட எஸ்பி கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், சுப்பிரமணியனை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story