தீவினை அகற்றும் முருகா..! தீரமும் தந்திடு கந்தா..! முருகனின் அருள் வாசகங்கள்..!

Murugan Quotes in Tamil
X

Murugan Quotes in Tamil

Murugan Quotes in Tamil-'முருகு' என்றால் அழகு. முருகன் என்றால் அழகன். முருகனை தமிழ் கடவுள் என்றும் அழைப்பார்கள். முருகனின் அறுபடை திருக்கோவில்கள் பெருமை பெற்றவை.

Murugan Quotes in Tamil-முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் இந்துக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்த நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதைத் தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாகக் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன. அந்த முருகன் பற்றிய மேற்கோள்களை இங்கு தருகின்றோம்.

வேலுண்டு வினையில்லை

மயிலுண்டு பயமில்லை

குகனுண்டு குறையில்லை

கந்தனுண்டு கவலையில்லை மனமே.

கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம்

கவலைகள் உனக்கேன் நெஞ்சே நெஞ்சே

வருவது வரட்டும் அஞ்சேல்

தந்தையும் மகன்பால் தத்துவம்

கற்றான் என்றபின் எல்லாம்

அவனே ஓம் சரவணபவ.

உருவாய் அருவாய், உளதாய்

இலதாய் மருவாய் மலராய்,மணியாய்

ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய்

விதியாய்க் குருவாய் வருவாய்

அருள்வாய் குகனே.

உன் மனதின் தரத்தைப் பொறுத்தே

உன் வாழ்வு! உன் எண்ணங்களின்

தரத்தைப் பொறுத்தே உன் ஆனந்தம்.

முருகா முருகா வருவாய்

முத்தமிழ் இன்பம் தருவாய்

பணிவாய் உன்னைத் தினம் பாட

பாங்காய் அருளைத் தருவாய்

கனவிலும் நனவிலும் துணையாகி

காத்திட வருவாய் குமரா

எங்கள் அறிவைப் பெருக்கிடவே.

நான் விழுந்தாலும், கோவிலாக விழுவேன்; நான் எழுந்தாலும் கடவுளாக எழுந்தருளுவேன்.

நீதியின் மீது நீ வென்றால் உன் நிழலைக் கூட நான் விழ விடமாட்டேன்.

என்னில் நீ என்ன முயற்சி செய்கிறாயோ அதுவே உன் சாகசமாக இருக்கும்.

வாழ்க்கையைத் தொடர முடியாத தேவதைக்கு, மரணம் என்னுடைய வரம், தன் வாழ்க்கையைத் தொடரக் கூடாத ஒரு அரக்கனுக்கு, மரணம் என் சாபம்.

மரணம் இல்லா வாழ்வு, கடவுள் இல்லாத கோவில் போன்றது.

நீதியைக் காப்பாற்ற என்னால் இயன்றவரை முயற்சித்தேன், இறுதியில் அநீதியை அழிப்பதில் முடித்தேன்.

நான் உன்னை சமாதானம் செய்யும்போது, என் நிஜமான நிறத்தையும், என் விஸ்வரூபத்தையும் காண்பாய்.

மரணம் என்றால் என்ன என்பதை அறியுங்கள்.. வாழ்க்கை என்றால் என்ன என்பதை அறிய.

கடவுளையும் அன்பையும் யாரும் பார்க்க முடியாது, ஏனென்றால் இரண்டும் உங்களுக்குள் உள்ளன..

கடவுளின் மகிமை உங்களுக்கு சேவை செய்வதில் இல்லை, கடவுளுக்கு சேவை செய்வதில் உங்கள் வாழ்க்கையை மகிமைப்படுத்துங்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!