மும்மொழி கொள்கையால் தமிழ் காணாமல் போகாது..!

பா.ஜ.,வின் சேலம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம், சங்ககிரி, குப்பனுாரில் நேற்று நடந்தது. அதில் மாவட்ட தலைவராக புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஹரிராமன் நிர்வாகிகளிடம் அறிமுகப்படுத்தி கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்பதால் தமிழ் காணாமல் போகாது. பாரதியாரே, 18 மொழிகளை கற்றுள்ளார். மொழிகளைக் கற்பது கண்டிப்பாகத் தேவை.
இந்தி மூலம் வியாபாரத்தில் வெற்றி
சேலம் மாம்பழத்தை 10 மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன். இந்தி தெரிந்ததால் தான் அந்த வியாபாரத்தை செய்கிறேன். இந்தி கற்றுக் கொள்வதால் வியாபாரத்தில் வெற்றி பெறலாம்.
2026 தேர்தலில் பா.ஜ.க்கு வெற்றி
வரும் 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற கட்சியினர் அனைவரும் பணியாற்ற வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட்டால் பா.ஜ.க்கு வெற்றி நிச்சயம்.
புதுப் பொறுப்புகளுடன் ஹரிராமன்
இவ்வாறு அவர் பேசினார். சங்ககிரி புது மண்டல தலைவர் தனபால், சேலம் மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் சுதிர்முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்ட செயலர் ரமேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் ஹரிராமன் சித்தர் கோவிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து அவருக்கு நல்லணம் பட்டியில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின் பொறுப்பாளர் அறிமுக விழா நடந்தது. இடங்கண சாலை மண்டல தலைவர் கலைச்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu