அனைவரும் பசியாற வேண்டும் : உத்தரவிட்ட சிவபெருமான்..!
ஒவ்வொருமுறை நடை சாத்தும்போதும் பகலிலும் , இரவிலும் கோயில் அர்ச்சகர் ஒருவர் நான்கு கோபுர வாசல்களிலும் கையில் பந்தத்துடன் வந்து யாரும் பசியாக இருக்கின்றீர்களா? என்று கேட்டு விட்டு செல்கிறார்.
அப்படி யாரேனும் பசியாக உள்ளேன் என்று சொன்னால் அவரை கோயிலுக்கு அழைத்துச் சென்று அவருக்கு உணவிட்டு பின் தான் கோவில் நடையை சாத்த வேண்டும். இதை ஈசனின் கட்டளையாகவே இன்றும் பின்பற்றுகின்றனர்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் நகரிலுள்ள வைக்கத்தப்பன் கோயில் தான் அது. வேண்டுபவர்களுக்கு, விரும்பியதை வழங்கும் தலமாகக் இந்த கோயில் திகழ்கிறது.
வியாக்ரபாதர் முனிவர் இங்கு பூஜை செய்து, இறைவன் கார்த்திகை - அஷ்டமியன்று காட்சி கொடுத்தார் . இறைவன் காட்சி கொடுத்த திதி இன்றும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அன்றுமட்டும் சூரிய ஒளி சிவலிங்க திருமேனி மீது மாலையாக படும்.
இந்தக் கோயில் கருவறையில் இரண்டு அடி உயரப் பீடத்தில், நான்கு அடி உயரமுடைய சிவலிங்கம் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்திருக்கிறது. மூலவரான இவரது பெயர் மகாதேவர் என்பதாகும். இருப்பினும் அனைவருக்கும் பரவலாக அறியப்பட்ட பெயர் வைக்கத்தப்பன் என்பதுதான். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்டதால் ‘வியாக்ரபுரீசுவரர்’ என்றும் இத்தல இறைவனை அழைப்பதுண்டு.
இந்த ஆலயத்தில் அம்மனுக்கு என்று தனியாகச் சன்னிதி இல்லை. கோவிலின் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அம்மனை வழிபட்ட பலன்கள் அனைத்தும் கிடைக்கும் என்கின்றனர்.
இடம் : வைக்கம் ( கோட்டயம் , கேரளா )
இறைவன் : வைக்கத்தப்பன், வியாக்ரபுரீஸ்வரர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu