குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று..! தாய்மைக்கான விருது..!

X
Pregnancy Quotes in Tamil
By - K.Madhavan, Chief Editor |28 Sept 2022 3:42 PM IST
Pregnancy Quotes in Tamil-தெய்வம் பெற்றோருக்கு தந்த புதிய பூ, குழந்தை. அம்மா, அப்பா என்ற பட்டம் தந்த பல்கலைக்கழகம், குழந்தை.
Pregnancy Quotes in Tamil-குழந்தை என்பது உயிரினங்களுக்கு கிடைத்த வரம். எத்தனையோ பெண்கள் தனக்கு குழந்தை இல்லை என்று ஏங்கித் தவிப்பதையும் நாம் கண்டிருக்கிறோம். குழந்தைப்பருவம் என்பது மனிதர்களில் மட்டுமல்ல உயிரினங்களில் அனைத்துக் குழந்தைகளுமே அழகுதான். அது பன்றிக்குட்டியாக இருந்தாலும் சரி, யானைக்குட்டியாக இருந்தாலும் சரி.
- ஆணினத்திற்கே கிடைக்காத ஒரு பாக்கியம். பெண்னினம் மட்டுமே பெற்று வரும் பரிசு..!
- ஒரு கவளம் சோற்றைக் கூட அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..உயிர் ஜனித்த சேதி கேட்டு கவளம் கவளமாக சோறுண்ணும்..குழந்தைக்கும் சேர்த்து..
- ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்..தாய்மையின் அதிசயம்..!
- தொழில்நுட்ப வளர்ச்சிகளில் தாயின் கருவறையை விடப் பாதுகாப்பான அறையை குழந்தைக்கு எந்த விஞ்ஞானமும் தந்துவிட முடியாது.

- இறைவனின் வல்லமைக்கு தாய்மையை விட சான்று ஒன்று வேண்டுமோ..?
- பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப் போகிறது..ஏதோ ஒரு சுமைக்கு..ஆனால்
- பத்து மாதம் சுமந்தாலும் கருவறை எனோ கனப்பதில்லை..
- வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் ஆனால், பிரசவ வலியில் துடித்தாலும் உயிர் ஜனித்த பின்னே வலியெல்லாம் இன்பமாகும்...!
- குழந்தையாய்...சிறுமியாய்...குமரியாய்...மனைவியாய் வளரும் உறவு தாய்மையில்தான் தன்னிறைவுப் பெறுகிறது..பெண்ணின் பிறப்பை பெருமைப்படுத்த..
- கொஞ்சும் போது தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியமாகிப்போனது..
- தாய்மையின் மகத்துவத்தை எத்தனை தத்துவமாயும் தத்ரூபமாயும் சொல்லலாம் எல்லாவற்றையும் விட,,ஆமாம்...தாயின் மடியில்தான் சொர்க்கம் உறங்குகிறது..

- என்னை சுமக்கும் தேவதை நீ...தாலிக் கொடியில் பிணைத்த என்னையும்...தொப்புள் கொடியில் பிணைத்த நம் உலகத்தையும்...
- நாயகன் கைகோர்த்து நாளொரு தவமிருந்து நாட்கள் தள்ளி நல்லதொரு சேதி சொன்ன நாள் முதல் தொடங்கியது தாய்மையின் முதல் அத்தியாயம்..
- மசக்கையின் மந்திரத்தில் மாற்றங்கள் எனக்குவர மன்னவன் தோள் சாய்ந்து மயக்கம் வருகுதென்றேன்,
- தூயவளே துயர் வேண்டாம். நம் குழந்தை நீ சுமக்க என் குழந்தையாய் உன்னை நான் சுமக்கிறேன் துணிந்து வா என்னோடு என்றுரைத்தான்..
- வாந்தியும் சோர்வும் வாட்டி வதக்கையிலே வசமிழந்து வந்து நின்றேன் என் தாயிடம். என் மகளே, மாதராய் பிறந்திட்டால் மணிமுத்தை பெற்றெடுக்க ஈரைந்து மாதங்கள் இவையனைத்தும் வருமென்று பக்குவமாய் எடுத்துரைத்தாள்..
- பிடித்ததெல்லாம் பிடிக்காமல் போக பிடிக்காததெல்லாம் பிடித்துப்போக அவையனைத்தையும் சுவைத்து தீர்க்க முதல் மூன்று மாதமும் முறையாய் முடிந்தது..
- பிறர் சொல்லிக் கேட்டறிந்தேன். காட்சியாக பார்த்திருந்தேன்.மனதார நானுணர்ந்து மகிழ்ந்து களைத்திருந்தேன் உன் அசைவில்..என் செல்லமே..
- என் வயிறும் வளர்ந்திருக்க வாட்டமும் குறைந்திருக்கவசமாய் வளைந்து போனது இரண்டாம் மூன்று மாதங்களும்..

- நீ வரும் நாளை நித்தமும் எதிர்நோக்கி நித்திரையும் நினைவாகிப் போனதே, உயிர் போகும் வலி என்றறிந்தும் உனக்காக எதிர் கொள்ள துணிந்தேன்,என் கண்மணியே ..
- அம்மா அம்மா என்று பலமுறை நான் அலற..அழகாக நீ வந்தாய் என்னை அம்மா என்றழைக்க என் பூங்குயிலே..!
- ஒற்றை மொழி பேசி, தத்தித் ததும்பி நடந்து, சிரிப்பால் அன்பைப் பொழிந்து, தாலாட்டில் தான் மயங்கி பிடிவாத குணம் கொண்டு, குரங்கு போல் குறும்பு செய்தாலும், மாதாவும் பிதாவும் தங்களின் உயிராய் நினைக்கும் மழலை..
- தினந்தோறும் உதிக்கும் சூரியன் கூட தோற்றுப்போகும், உந்தன் கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பின் முன்னால்...
- வராத வந்த வரம் நீ..எனக்கு கிடைத்திட்ட முத்து நீ..எனக்குள் உதித்த உயிர் நீ..கடவுளிடம் வேண்டினேன்..முத்தமாக இல்லை..இல்லை மொத்தமாக உன்னிடம் ஒரு வரம் பெற..ஆமாம்..தாய் என்ற வரம்..!
- எத்தனைக் கோடி இன்பம் வந்தாலும் உன்னை ஈன்ற இன்பம் போல எனக்கு ஏதும் இன்பம் இல்லையடி..
- எத்தனைக்கோடி பணம் இருப்பினும் எனக்கு பெரிதாகத் தோன்றவில்லை, நீ எனக்கு கிடைத்தபின்னே..நீயே என் பெரும் சொத்து..!
- தாய்மையின் பட்டம் தந்த பல்கலைக்கழகம் நீ..நம் குடும்பத்தின் புதிய புத்தகம் நீ..வாழ்க்கையின் தத்துவம் கற்றுக்கொடுக்கும் புதிய ஆசானும் நீ..

- உன் அப்பாவோ என்னை வென்றுவிட்ட மர்மப் புன்னகையை என் மீது வீசி..உன்னை ஜாடை காட்டுகிறார்..என் செல்லமே..
- எதையோ இழந்தோம் என்று வாழ்ந்திருந்த நமக்கு, இன்று "எதையும் இழக்க தயார் உனக்காக" என்று உண்ர வைத்தது நம் குழந்தை..
- கள்ளம் கபடம் இல்லாத உன் சிரிப்பில், என்னை உன் மன சிறையில் அடைத்து விட்ட கள்ளி நீ..
- கொஞ்சிக் கொஞ்சி நீ பேசுகையில், கொஞ்சம் குழம்பித்தான் போகிறது என் நெஞ்சம்.. உன் தத்தை மொழியில் தமிழின் அழகு கூடுதே..
- உன் அர்த்தமில்லா சிறு புன்னகை கூட எனக்கு பெரிய படிப்பினைத்தருகிறது..என் வாழ்வின் முழு அர்த்தமும் நீயே..
- அறிவாய் ஆறுதல் கூற முடியாத போதும், அழகால் கவலைகளை மறக்கச் செய்பவர்கள் தான் மழலைகள்..
- மழலை மொழி போல மகிழ்ச்சி ஏதும் இல்லை, மருத்துவமும் ஏதும் இல்லை.. மட்டற்ற ஆசைகள் மட்டுமில்லாமல் மற்றதெல்லாம் கூட தோற்குமே.. மழலையின் புன்னகை மொழியாலே..
- கருவுக்குள் சூல்கொண்ட மலரே..உன் வரவுக்கு காத்திருக்கும் என் விழியே..! பூத்திட்டாய் ஓருயிராய் என் வயிற்றுக்குள்.. இணைந்துவிட்டாய் புது உயிராய் தொப்புள் கயிறாய்..!

- என் கரு கோவிலுக்குள் இருந்த கடவுள் நீ..கடவுளும் கருவறைக்குள்..குழந்தையும் கருவுக்குள்..
- நீ கோபுரக் கலசம்..என் இதயக்கோவிலின் தெய்வம்..!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
Similar Posts
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu