பெண்களின் குங்குமம் தற்போது என்ன ஆனது...?
குங்குமப்பொட்டு-கோப்பு படம்
சுத்தமான கும்குமமானது படிகாரம், மஞ்சள், எலுமிச்சை மற்றும் வெண்காரம் சேர்த்து செய்யப்பட்ட சருமத்திற்கு எந்தவித தீங்கும் விளைவிக்காத ஒன்றாகும். இந்த பழக்கத்தை முற்றிலுமாக பெண்கள். கைவிட வேண்டும் என்று நினைத்த தனியார் நிறுவனமொன்று அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது.
அவர்கள் செய்தது என்னவென்றால் இயற்கையான குங்குமத்திற்கு பதிலாக செயற்கையான ரசாயனம் கலந்த சிவப்பு நிற பொடியை குங்குமம் என்ற பெயரில் அதிக அளவில் சந்தையில் பயன்பாட்டிற்கு விட்டார்கள்.
பல்வேறு. வியாபார யுக்திகளால் அதிக அளவில் வணிகர்களை இந்த ரசாயன குங்குமத்தை விற்க வைத்தார்கள். மக்களும் அதை பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாட்கள் செல்ல சுத்தமான குங்குமம் தயாரிப்பவர்கள் பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் அழியத் துவங்கினர்.
எனவே ரசாயன குங்குமத்தை தொடர்ந்து உபயோகித்து. வந்த பெண்களுக்கு நெற்றியில் அரிப்பு தழும்பு ஏற்படுவது போன்ற சரும பிரச்சனைகள் வர ஆரம்பித்தன.இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் குங்குமம் வைப்பதுதான் காரணம் என்று பரப்பப்பட்டு நம்பப்பட்டது.
இந்த கருத்து மக்களிடம் ஆழமாக வேரூன்றிய பின்பு அதே நிறுவனம் ஸ்டிக்கர்(ஸ்டிகர்) பொட்டுகளை சந்தையில். வெளிவிட்டது. பெண்கள் குங்குமத்தில் இருந்து ஸ்டிக்கர் பொட்டுக்கு மாறினர். அவர்களின் முதல் வெற்றி பெண்களை குங்குமம் அணியவிடாமல் செய்தது.
நாட்கள் செல்லச்செல்ல சந்தை முழுவதும் ஸ்டிக்கர் பொட்டுகளின் ஆதிக்கம் அதிகமானது, பொட்டு என்றாலே அது ஸ்டிக்கர் பொட்டு தான் என்று வியாபாரம் செய்தும் பின்னர் அதுவே நிலையானது.
அந்த நிறுவனத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக பொட்டுகளின் நிறம் மாற்றப்பட்டது. சிவப்பிலிருந்து நீலம், பச்சை என்றவாறும் ஆடைக்கு தகுந்த நிறம் என்றும் மாற்றப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டது.
பொட்டு வைப்பது கலாச்சாரத்தின் ஒரு மரபு என்ற நிலை மாறி. நாகரீகம் மற்றும் நவீனமயமாதலின் ஒரு அங்கம் என்பது போல் விளம்பரமும் வியாபாரமும் செய்யப்பட்டது.
பெண்களும் அந்த கருத்துக்கு அடிமையானதை சாதகமாக்கிகொண்ட அந்த நிறுவனம் தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக பொட்டுகளின் அளவை குறைக்க ஆரம்பித்தன. பின்னர் அதன் வடிவத்தை நிலா போன்றும் நட்சத்திரத்தை போன்றும் பல்லி போலவும் பூரான் போலவும் மாற்றின.
பின்னர் அதுவே மார்கெட் ட்ரெண்ட் ஆனது, போட்டி நிறுவனங்களும் அதே பாணியை தொடர்ந்தன. பொட்டின் அளவை சுருக்குவதும் வடிவத்தை மாற்றுவதுமாக ஒரு கட்டத்திற்கு மேல் பொட்டு இல்லாமல் இருப்பதே நவீன நாகரீகம் என்று விளம்பரம் செய்யப்பட்டு அதை நம் இன்றைய இளையதலைமுறை பெண்கள் நிஜமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சரி எதற்காக அந்த நிறுவனம் இதையெல்லாம் செய்ய வேண்டும்,? காரணம் பார்த்தால் இதற்கு பின்னால் இருந்து செயல்படுவது மதம் மாற்றும் கும்பல் தான். இந்துகளின் சம்பிரதாயங்களயும் பண்பாட்டையும் அழிக்க நினைத்த மிஷினரிகள் முதலில் குறி வைத்தது பெண்களிடம் இருந்து பொட்டு வைக்கும் பழக்கத்தை அறவே அழிப்பது என்பதே.
இந்த ஒற்றை இலக்கை அடைய அவர்கள் 30 வருடங்களாக திட்டம் தீட்டி அதை இன்று ஓரளவுக்கு நிறைவேற்றியும் இருக்கின்றனர். இப்படி நமக்கு தெரியாமலே எத்தனயோ விஷயங்களுக்கு நாம் பலியாகிக் கொண்டிருக்கிறோம்.
இந்துக்களாகிய நாம். விழிப்படைய வேண்டிய நேரமிது. இந்து பண்பாட்டிற்கு எதிராக யாராவது பேசினால் அதில் எந்தவித உண்மையும் இல்லை. அதற்கு பின்னால் இருப்பது மதமாற்றமும் வியாபாரமும் மட்டுமே என்பதை அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu