/* */

தாலிக்கயிற்றில் என்னை முடிந்துகொண்டவன்..! என்னவன்..அவனே என் மன்னவன்..!

Best Husband Quotes Tamil-என் நெற்றிப்பொட்டுக்கு சொந்தக்காரன். என் இறப்பு வரையிலும் என் கூட வரும் மூன்றாம் கால் அவன்தான்.

HIGHLIGHTS

Best Husband Quotes Tamil
X

Best Husband Quotes Tamil

Best Husband Quotes Tamil-கணவன்,மனைவி பந்தம் என்பது காதலால் எழும் உள்ளத்தை அளவிட்டு கூறிவிடமுடியாது. அது இருவருக்குள்ளும் ஒளியேற்றும் தீபம்போல உள்ளுக்குள் ஒளியேற்றும். அதன் ஒளிப்பிரவாகம்தான் அன்பின் வெளிப்பாடாய், தலைமுறைகளை தொப்புள்கொடியில் பிணைக்கும் பந்தமாகும்.

 • உன்னைத் தவிர வேற யாரையும் என்னால நெனச்சு பார்க்க முடியாது. அதே மாதிரி, உன்ன எப்போவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவும் என்னால முடியாதுடா..
 • உந்தன் நெற்றி மீது ஒற்றை முத்தமிட்டு எனக்கானவன் நீதான் என முத்திரை பதித்திட ஆசையடா...
 • மயிலிறகாய் என் மனம் வருடி மலர்கின்றாய், என் மன்னவனே.. பகல் நிலவாய் என் பாதையில் ஒளிர்கின்றாய் என்னவனே.. நிழற்குடையாய் நீ நிற்க ஏங்குகிறேன் என்னுயிரே.. நிழல் படமாய் நானிருக்க நேரமென்ன என் மாயவனே?
 • ஒரு வண்ணத்துப்பூச்சி என்னிடம் வந்து கேட்டது, உன் காதலன் என்ன ஓவியமா என்று..? அதற்கு நான் சொன்னேன், இல்லை அவன் என் உயிரின் காவியம் என்று...!
 • அழகானவன் அல்ல... எனக்கு மட்டும் அழகாய் தெரிபவன்.. அவன் அன்பினால் அழகானவன்..!
 • நெற்றியில் இருக்கும் சிவப்புப் பொட்டு நீ.. என் பெண்மைக்கு நீ தந்த பரிசல்லவோ.. கணவனே என் ஆருயிர் காதலனே..
 • வணங்குவது எந்தன் கை என்றாலும், வேண்டுதல் என்னவோ, என்னவனுக்கே..
 • அவனின் அணைப்பின் கதகதப்பில், அதிகாலை குளிரும் சற்றே, அடங்கித்தான் போகிறது..
 • குடையால் தடுக்க முடியவில்லை..எனக்குள் பெய்யும் மழை..ஆமாம் அவனின் அன்பால் முழுவதும் நனைந்து, தோய்ந்து, மெதுவாய் கரைகிறேன்..அவனுக்குள்..!
 • பாசத்தைப் பொழிய பலர் இருப்பினும், மனம் களைப்பாகும் போது, என்னவோ.. இளைப்பாற தேடுவது என்னவோ உன் மடியைத்தானடா..
 • அழகான நினைவு நீ..அன்றலர்ந்த நிலவு நீ.. கலையாத கனவு நீ..என்னை கொள்ளையடித்த கள்வன் நீ..! புரிந்துகொள்ள முடியாத உணர்வும் நீ..எனக்குள் இருந்து பிரிக்கமுடியா உறவும் நீ..என் உயிரோடு கலந்த எல்லாமும் நீயே..
 • களிப்பு மிகுதியில் காதல் கசிந்து உன் கன்னம் கடிக்க ஆசையடா.. கன்னங்களைத் தா.. காதல் சுவடொன்று பதிக்க..
 • என் இதயத்தில் நீ குடியிருப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.. ஆனால், முன்பணமாக ஒரு முத்தமும், வாடகையாக ஒரு பார்வை நித்தமும் வீசிப் போ..நான் வாழ்ந்து போவேனடா..
 • திக்கு முக்காடி போனேனடா.. உன் பரவச அணைப்பில்..உன் அன்பின் மிகுதியால் அளவில்லா காதலின் வெகுமதியாய் உனக்கு நானும்; எனக்கு நீயும்..
 • அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாமடா..ஏனோ, எனக்கு அமிழ்தமாகவே தெரிகிறது அவன் முத்தம்..அளவுக்கு மிஞ்சினாலும்...
 • விழுதுகள் மரத்தை தாங்கலாம். வேர் மட்டுமே அதை வாழ வைக்க முடியும். எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் ஒரு ஆணுக்கு மனைவி தான் ஒப்பற்ற துணை. ஒரு பெண்ணுக்கு கணவன் தான் ஈடு இணையற்ற துணை. அதற்கு இணை வேறு எதுவும் இல்லை.
 • நான் கேட்காமல் கிடைத்த வரம் நீ. இப்போது வரமாக கேட்கிறேன்..உன்னை பிரியாத வாழ்வு வேண்டும் என்று.
 • நீ இல்லாத நேரங்களில் கூட உன் நினைவுகளிலும் உன் முத்தச் சத்தம் என்னை இம்சிக்கிறதடா..
 • எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன். விட்டுச் செல்லவும் மாட்டேன் என்று இருக்கும் ஒரு ஆண்.
 • உயிர் மெய் எழுத்துக்களால் நிறைந்திருக்கும் எனது கவிதைகள் மட்டும் உனக்கு இல்லை. அதில் கலந்திருக்கும் உயிரும் உனக்கானது தான்.
 • தன் மனைவியின் கோபத்தையும் பிடிவாதத்தையும் புரிந்து கொள்ளும் எந்த ஒரு ஆண் மகனும் தனது மனைவி கண்ணீர் சிந்துவதை விரும்புவதில்லை.
 • நானும் நீயும் கணவன் மனைவியாக வாழ இந்த காதல் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.
 • எவ்வளவு பெரிய துன்பத்தையும் ஒரே ஒரு புன்னகையால் விழுங்கி விடுவாய்.
 • கணவன் பணக்காரனாக இல்லை என்றாலும் பரவாயில்லை. கடன் காரனாக இருக்கக் கூடாது என்று நினைக்கும் நீதானடி உண்மையான மனைவி.
 • என் இதயம் இருப்பது என்னவோ.. எனக்குள் தான் இருக்கிறது..! ஆனால் அது துடிப்பதென்னவோ உனக்காக மட்டும் தான்.
 • கணவன்-மனைவி காதல் என்பது கட்டிப் பிடிப்பதிலும், முத்தம் கொடுப்பதிலும் மட்டும் இல்லை. தன்னோடு வாழ்பவரின் வலியையும், உணர்வையும் புரிந்து வாழ்வதில்தான் இருக்கிறது.
 • எனக்கான சிறிய உலகத்தில் நான் தேடிக்கொண்ட கொண்ட மிகப் பெரிய உறவு நீ..நீண்டு பயணம் செய்ய..!
 • நாம் ஒருவரை நேசிக்கும் போது நம் முகம் அழகாய் தெரியும்..! நம்மை ஒருவர் நேசிக்கும் போது இந்த உலகமே பேரழகாய் தெரியும்.
 • கடல் நீர் வற்றும் வரை, காகித மலர்கள் வாடும் வரை, ஆகாயம் அழியும் வரை, என் ஆயுள் முடியும் வரை உன்னை காதலிப்பேனடா..!
 • தினமும் துயிலெழுந்து உனக்காகவே முகம் பார்க்கிறேன். உன்னால் நான் அழகுபெறுவதை ரசிப்பதற்காக..!
 • தினமும் துயிலெழுந்து முகம் பார்க்கையில், நீ என்னுடையவனா என்று என்னைக் கிள்ளிக்கொள்கிறேன்..இன்னும் என்னால் நம்ப முடியவில்லை, நீ எனக்கானவன் என்று..!
 • கோபப்படுங்க..திட்டுங்க..ஆனா அடித்துவிடாதீர்கள். ஏனெனில் வலிப்பது உங்களுக்காகத்தான் இருக்கும். மனைவியைத்தாங்கும் கணவர்களுக்கு..
 • எப்போது சண்டையைத் தொடங்குவாய் என்று காத்திருக்கிறேனடா..ஏனெனில் உன் சமாதான ஊடலை நான் ரசிக்கவேண்டுமல்லவா..?!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 March 2024 9:27 AM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...