Akka Thambi Quotes Tamil-ஒரு தாயின் தொப்புள்கொடி உறவுகள், அக்கா-தம்பி..!

Akka Thambi Quotes Tamil-ஒரு தாயின் தொப்புள்கொடி உறவுகள், அக்கா-தம்பி..!
X

akka thambi quotes tamil-அக்கா தம்பி மேற்கோள்கள் (கோப்பு படம்)

குழந்தைகளாக இருக்கும் போதே வாழ்வின் மதிப்பீடுகள், குடும்ப உறவுகள், அன்பு போன்றவற்றின் அவசியத்தைப் போதிக்க வேண்டும்.

Akka Thambi Quotes Tamil

கிராமப் புறங்களில் சகோதர சகோதரிகளை “கூடப் பொறந்ததுக” என்பார்கள். கூடி வாழ்வதற்காகப் பிறந்தவர்கள் என்பதே அதன் பொருள். அப்படி ஆனந்தமாய்க் கூடி வாழ்வதற்காகப் பிறந்தவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள் எனும் கேள்வியை ஒவ்வொருவரும் எழுப்ப வேண்டியது அவசியம்.

சின்ன வயதில் தோப்பிலும், வரப்பிலும், குளத்திலும் ஆனந்தமாய் குதித்து விளையாடும் சகோதரர்கள் வளர வளர தங்களுடைய பிணைப்பைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்துக் கொள்கிறார்கள். இந்த அன்னியோன்யம் முழுமையாய் மறைந்து போய் பல நேரங்களில் வெறுப்பாய் மாறுவது துயரத்தின் உச்சம்.

Akka Thambi Quotes Tamil

இருப்பினும் உடன்பிறப்புகளின் பாசம் கிராமங்களில் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக குழப்பங்கள் இல்லாத வீடுகள் இல்லாமலா இருக்கின்றன. ஆனால் பாசம் இன்னும் தொப்புள்கொடி பந்தமாக தொடர்கிறது.

அக்கா தம்பி மேற்கோள்களை பாப்போம் வாங்க.

அக்கா – தம்பி

உறவை பற்றி கவிதை

எழுத முயற்சி செய்து

தோற்றுப் போனேன்

இந்த அக்கா – தம்பி உறவே

ஒரு அழகிய கவிதை

என்பதை உணர்ந்த பின்பு .

தாயின் மறு உருவம் நீ..

உனது முதல் பிள்ளையாக நான்

அன்பால் இணைந்து இருக்கும்

இரு விண்மீன்கள்

அக்கா – தம்பி!

Akka Thambi Quotes Tamil

வயதால் எவ்வளவு தான்

அதிகமானாலும் ஒரு அக்காவுக்கு

தன் தம்பி எப்போதும்

சிறு பிள்ளை தான்!

தம்பிகள் இருக்கும்

அக்காக்களுக்கு மட்டுமே

தெரியும். அது குட்டி குழந்தை அல்ல

குட்டி பிசாசு என்று..!

பிறப்பு, இறப்பு, வாழ்க்கை,காதல்,

எல்லாம் ஒரே ஒரு முறை ஆனால்

நான் உன் மீது கொண்டஅன்பு மட்டும்

உன் தம்பி நான் சாகும் வரை..

அக்கா.!

Akka Thambi Quotes Tamil

தம்பிகளுக்கு மட்டும் தான் தெரியும்

தன் அக்காவின் அன்பும்

கண்டிப்பும் இன்னொரு

அம்மாக்கு சமம் என்று.!

தம்பியை

தன் அன்பால் அடக்கவும்

தம்பியின் கோபத்திற்கு

அடங்கவும் தெரிந்த ஒரு பெண்

அக்கா என்றால் அந்த

அக்கா தம்பி பாசம் என்றும்

ஒரு சொர்க்கம் தான்..!

அம்மாவிடம் கூட சில உண்மைகள்

மறைப்பதற்கு இருக்கலாம்

ஆனால் அக்காவிடம் மறைப்பதற்கு

ஒன்றுமே இல்லை.

Akka Thambi Quotes Tamil

பிள்ளை பாக்கியம் பெறாமலே

தாயாகும் பாக்கியம்

அக்காகளுக்கு மட்டுமே உண்டு.

அன்னையின் அரவணைப்பை

அவளிடம் கண்டேன்

அன்பிற்கு அடைமொழி கேட்டால்

என் அக்கா என்பேன்!

உன் அன்பிற்கு நான் அடிமை

உன் கண்டிப்புக்கு நான் குழந்தை

உன் துன்பத்தில் நான் நண்பன்.

“அக்கா” பாசத்தின் தாய்

அரவணைப்பின் அன்னை..

மகிழ்ச்சியின் அம்மா..!

தம்பியின் கோபத்திற்கு

அடங்கவும் அதே தம்பியை

தன் அன்பால் அடக்கவும்

தெரிந்த ஒரு பெண் அக்கா

என்றால் அந்த

அக்கா தம்பி பாசம்

ஒரு சொர்க்கம் தான்..!

Akka Thambi Quotes Tamil

நேரம் காலம் பார்த்து

சண்டை போடுவதல்ல

அக்கா தம்பி பாசம்..

நினைத்த நேரம் எல்லாம்

சண்டை போடுவது தான்

அக்கா தம்பி பாசம்..!

தம்பிகளுக்கு தான் தெரியும்

தன் அக்காவின் அரவணைப்பும்

கண்டிப்பும் இன்னொரு

தாய்க்கு சமம் என்று..!

தம்பியை குழந்தையாக

பார்ப்பதும் அக்காவை

அம்மாவாக பார்ப்பதும் தான்

வார்த்தையால் விவரிக்க

முடியாத உன்னதமான உறவு

அக்கா தம்பி..!

Akka Thambi Quotes Tamil

பிறப்பு, இறப்பு, காதல், வாழ்க்கை

எல்லாம் ஒரு முறை ஆனால்

உன் மீது கொண்ட பாசம் மட்டும்

உன் தம்பி சாகும் வரை..

அக்கா..!

அக்கா தம்பியின் பாசத்திற்கு

முன்னால் அம்மா அப்பாவின்

பாசம் கூட தோற்றுப்போகும்..!

தம்பிகள் இருக்கும்

அக்காக்களுக்கு மட்டுமே

தெரியும்.. அது குழந்தை அல்ல

குட்டி சாத்தான் என்று..!

தம்பிக்கு அக்காவிடம்

இருந்து வரும் அன்பினை விட

சிறந்தது வேறு எதுவுமில்லை..

அக்காவிற்கு தம்பியிடம்

இருந்து வரும் அன்பினை விட

சிறந்தது வேறு எதுவுமில்லை..!

அக்காவின் கண்ணீரை

தாங்கிக் கொள்ளும் சக்தி

தம்பிக்கும் இல்லை..

தம்பியின் கண்ணீரை

தாங்கி கொள்ளும் சக்தி

அக்காவிற்கும் இல்லை..!

Akka Thambi Quotes Tamil

எவ்வளவு தான் சண்டை

போட்டாலும் கடைசி வரை

பிரியாமல் இருக்கும்

ஒரே உறவு அக்கா தம்பி

உறவு மட்டுமே..!

வயதால் எவ்வளவு தான்

வளர்ந்தாலும் அக்காவுக்கு

தன் தம்பி என்றுமே

சிறு குழந்தை தான்..!

சின்ன சின்ன கோபங்கள்..

சின்ன சின்ன சண்டைகள்..

நட்பு.. பாசம்.. நேசம்..

எல்லாம் வேண்டும்

அக்கா தம்பியின்

உண்மையான அன்புக்கு..!

உன் அன்பிற்கு நான் அடிமை.

உன் அரவணைப்பில்

நான் குழந்தை..

உன் அச்சத்தில் நான்

உன் தம்பி..!

Akka Thambi Quotes Tamil

தாயிடம் கூட சில உண்மைகள்

மறைப்பதற்கு இருக்கலாம்..

ஆனால் அக்காவிடம்

மறைப்பதற்கு பொய்கள் கூட

ஒன்றுமில்லை..!

தாயின் மறு உருவமாக நீ..

உனது முதல் குழந்தையாக நான்

அன்பால் இணைந்து இருக்கும்

இரு மலர்கள்

அக்கா – தம்பி..!

அக்கா எனும் வார்த்தையில்

தாய்மையை முதன் முதலாய்

தந்து என் கண்ணீரிலே

மொத்த உயிரையும்

வைத்தவன் அவன்

என் தம்பி..!

Akka Thambi Quotes Tamil

மறு ஜென்மம் வந்தால் கூட

நான் தான் இவளின் தம்பி..

என்றும் என்றென்றும்

இவளின் சொந்தம் வேண்டும்..!

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!