விருதுநகர் மாவட்டம், நரிக்குடியில் வாரச்சந்தை அமைக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை
நரிக்குடியில் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்;
நரிக்குடியில் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 44 ஊராட்சிகளில் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நரிக்குடியிலிருந்து அனைத்து கிராமங்களையும் இணைக்கும் விதமாக பேருந்து வசதி இருப்பதால் நாள்தோறும் பொதுமக்களும் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்க பெரும்பாலும் நரிக்குடிக்கு வந்து செல்கின்றனர்.
தற்போது நரிக்குடி மற்றும் அதனை சுற்றயுள்ள கிராமத்தை பொதுமக்களும், விவசாயிகளும் நரிக்குடி வந்து பின்னர் வேறு பேருந்தைப்பிடித்து வீரசோழன் கிராமம் சென்று வாரச்சந்தையில் பொருட்ககளை வாங்கி திரும்பிச்செல்கின்றனர் இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு நரிக்குடியில் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நரிக்குடி யூனியன் கவுன்சில் கூட்டத்திலும் நரிக்குடியில் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். எனவே நரிக்குடியில் வாரச்சந்தை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நரிக்குடி பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.