வேளாண்மை துறை மாணவர்களுக்கு கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி
கலசலிங்கம் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் குரண்டி கிராமத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டார வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கலசலிங்கம் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரியின் இறுதி ஆண்டு இளநிலை வேளாண்மை துறை மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவர்கள் குரண்டி கிராமத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் வேளாண் உதவி இயக்குனர் செல்வராணி, வேளாண்மை அலுவலர் முருகேசன், உதவி வேளாண் அலுவலர் ஆனந்தராஜ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் வீரபாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி, மாவட்ட பிரதிநிதி மருதுபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
கலசலிங்கம் இறுதி ஆண்டு இளநிலை வேளாண்மை துறை மாணவர்கள் சிவநந்தா, சீனிவாசன், வீரமணிதங்கம், ஶ்ரீராம், அருண் குமார், ஜெயராம், கருப்புச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு வேளாண் திட்டங்களான பயிர் காப்பீடு, கோடை உழவு, சொட்டுநீர் பாசனம், மாடித்தோட்டம், மானிய விதைகள் மற்றும் விவசாயிகளுக்கான பண்ணைப்பள்ளி, மாவட்ட சுற்றுலா, மாநில சுற்றுலா திட்டங்கள் குறித்தும் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.