நரிக்குடி அருகே வீரசோழன் கிராமத்தில் தகுதியின்றி மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீஸார் கைது செய்தனர்

நரிக்குடியில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-07-21 13:45 GMT

நரிக்குடி அருகே வீரசோழன் கிராமத்தில் தகுதியின்றி மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீஸார் கைது செய்தனர்.

நரிக்குடி பகுதிகளில் போலி டாக்டர்கள் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து நரிக்குடி வட்டார மருத்துவ அலுவலர் ரெங்கசாமி தலைமையிலான மருத்துவ குழுவினர் வீரசோழன் கிராமத்தில் போலி டாக்டர்கள் யாரேனும் உள்ளார்களா என விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, வீரசோழன் கிராமத்தில் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் பஞ்சாட்சரம் ( 74) என்பவர், தனது குடியிருக்கும் வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இவர், முறையான மருத்துவ படிப்பு இல்லாமல் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இது குறித்து ,வீரசோழன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார், போலி டாக்டர் பஞ்சாட்சரத்தை  கைது செய்தனர்.

Tags:    

Similar News