காரியாப்பட்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் ஆறுதல்

மழையினால் வாழ்வாதாரம் இழந்து வாடும் நரிக்குறவர் இன மக்களை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.;

Update: 2021-11-06 02:00 GMT
காரியாப்பட்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் ஆறுதல்

காரியாப்பட்டி பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்களை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

  • whatsapp icon

காரியாபட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைக்கு காரியாபட்டி அருகே குடியிருந்து வரும் நரிக்குறவர் காலனி மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர்.

இதையறிந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனடியாக அந்த மக்களை மீட்டு அரசு பள்ளியில் தங்க வைத்து உணவுகள் வழங்கியதுடன், தேவையான உதவிகளையும் செய்து வந்தனர்.

திருச்சுழி சட்டமன்ற தொகுதி, காரியாபட்டி அருகே கம்பிக்குடி பகுதியில் மழையினால் வாழ்வாதாரம் இழந்து வாடும் நரிக்குறவர் இன மக்களை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களது குறைகளை கேட்டறிந்தார். 

Tags:    

Similar News