காரியாபட்டி அருகே சாலையைக் கடக்க முயன்றவர் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே சாலை மறைக்குளம் - பனைக்குடி இடையே சாலையைக் கடக்க முயன்றவர் மீது இரு சக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியாகினர், ஒருவர் காயமடைந்தார்.;
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே சாலையைக் கடக்க முயன்றவர் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த அபிஷேக் (21) மற்றும் நவீன் (22) ஆகிய இருவரும் காரியாபட்டி அடுத்த உலக்குடியைச் சேர்ந்த தனது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுவிட்டு மீண்டும் உசிலம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிச்சென்றனர். நரிக்குடி- காரியாபட்டி சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது மறைக்குளம்- பனைக்குடி பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற பனைக்குடியைச் சேர்ந்த கருப்புச்சாமி (49) என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நவீன் மற்றும் வாகனத்தில் அடிபட்ட பனைக்குடியைச் சேர்ந்த கருப்புச்சாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து நரிக்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்