ஸ்ரீவில்லிபுத்தூரில் கிணற்றிலிருந்து இளைஞர் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை

ஸ்ரீவில்லிபுத்தூரில் 23 வயது இளைஞர் மர்மமான முறையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு. நகர் காவல்துறையினர் விசாரணை.;

Update: 2022-02-21 14:13 GMT

ஸ்ரீவில்லிபுத்தூரில் 23 வயது இளைஞர் மர்மமான முறையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு. நகர் காவல் துறையினர் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கூனங்குளம் தெற்கு தெருவை சேர்ந்த ஞானவேல் என்பவரின் மகன் முத்துக்குமார் வயது 23. இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முத்துக்குமார் நண்பர்களுடன் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து முத்துக்குமாரின் உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில் இன்று மொட்டபெத்தான் கண்மாய் அருகே உள்ள ஒரு கிணற்றில் நீரில் மூழ்கி சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து இளைஞர் முத்துக்குமார் மர்மமான முறையில் இறந்தது கிடந்தது கொலையா, தற்கொலையா, அல்லது காதல் தோல்வியா என்று பல்வேறு கோணத்தில் இறந்து போன முத்துக்குமாரின் நண்பர்களிடம் நகர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News