வீடு புகுந்து 4 பவுன் நகை திருடிய இளைஞர் பிடிபட்டார்

Update: 2021-04-22 12:15 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் புகுந்து 4 பவுன் நகை திருடிய இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் வீட்டு உரிமையாளர் ஒப்படைத்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் ராஜகோபால் என்பவருடைய வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார் . மேலும் ராஜகோபால் வீட்டில் மாடியில் மணிகண்டன் என்பவரும் வாடகைக்கு இருந்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வக்குமார் வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் மனைவி வீட்டு அருகே வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பார்த்த போது பீரோ திறந்து இருந்துள்ளது.

மேலும் வீட்டின் உள்ளிருந்து மாடியில் வாடகைக்கு உள்ள மணிகண்டன் வீட்டினுள் இருந்து வேகமாக ஓடியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேவி தனது கணவர் மற்றும் வீட்டு உரிமையாளர் ராஜகோபால் உறவினர் பாலமுருகன் ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.இந்த தகவலின் அடிப்படையில் ராஜ கோபால் மற்றும் பாலமுருகன் விரைந்து வந்து மேலே மாடியில் இருந்த மணிகண்டனை பிடித்தனர்.

மேலும் அவரை சோதனை செய்தபோது அவரிடம் சுமார் 2 பவுன் செயின் 2 பவுன் நெக்லஸ் இருந்தது.இதைத் தொடர்ந்து மணிகண்டனை கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பவுன் நகையை பறிமுதல் செய்து மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News