வத்திராயிருப்பு அருகே மதகு பழுதால் வீணாகும் தண்ணீர்: சீரமைக்க விவசாயிகள் காேரிக்கை

வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி பெரியகுளம் கண்மாயில் பராமரிப்பு இல்லாததால் மதகு வழியாக நீர் வெளியேறி வீணாகிறது.;

Update: 2021-11-29 11:17 GMT

கூமாப்பட்டி பெரியகுளம் கண்மாயில் மதகு பராமரிப்பு இல்லாததால் வீணாக நீர் வெளியேறி  வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி பெரியகுளம் கண்மாயில் மதகு பராமரிப்பு இல்லாததால் மதகு வழியாக நீர் வெளியேறி வீணாகி வருகிறது.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மிகப்பெரிய 47 அடி கொள்ளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணை உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக பெரியார் அணை 40 அடியை எட்டிய நிலையில் பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நீர் திறக்கப்பட்டுள்ளது.

அணையில் இருந்து வரும் நீரானது வத்திராயிருப்பு சுற்றுவட்டாரத்தில் உள்ள சென்று தற்போது கண்மாய்கள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் கூமாப்பட்டி பெரியகுளம் கண்மாய் நிரம்பி வரும் நிலையில் கண்மாயில் உள்ள மதுகுகளை பராமரிக்காததால் தற்பொழுது மதகில்லிருந்து நீர் வெளியேறி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். வருடந்தோறும் இதே நிலை தொடர்வதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

உடனடியாக மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News