ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தொடரும் மணல் திருட்டு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பல்வேறு பகுதிகளில் தொடரும் மணல் திருட்டு - 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்;

Update: 2021-04-10 03:36 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான திருவண்ணாமலை, செண்பகத்தோப்பு, மம்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மணல் திருட்டு நடப்பதாக துணை ஆட்சியர் தினேஷ் குமாருக்கு புகார் வந்ததையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை பிரதான சாலையில் வருவாய்த் துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது உரிமம் இன்றி மணல் கொண்டு வந்த 2 டிப்பர் லாரிகளை மடக்கிப்பிடித்தனர்.

தொடர்ந்து விசாரணையில் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்ததால் லாரிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News