முப்படை தலைமைத்தளபதிக்கு அரசு பள்ளி மாணவர்கள் மலர்தூவி அஞ்சலி
வீரமரணமடைந்த முப்படைத் தலைமை தளபதியின் உருவப்படத்திற்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள், மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் செல்லும் வழியில் ஹெலிகாப்டர் விபத்தில், இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராபத் உள்ளிட்ட 13 பேர், நேற்று வீரமரணமடைந்தனர். இந்த சம்பவம், நாட்டையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி அரசு பள்ளியில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராபத்தின் உருவப்படத்திற்கு, தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஏற்பாட்டில், மாணவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். ஆசிரியர்களும், மாணவர்களும், 10 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.,