விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மற்றும் வனத்துறை இணைந்து நடத்திய தீ விபத்து கட்டுப்படுத்துதல் குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை விருதுநகர் மாவட்டம் சார்பில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மற்றும் வனத்துறை இணைந்து நடத்தும் வனப்பாதுகாப்பு மற்றும் வனத் தீ விபத்து கட்டுப்படுத்துதல் குறித்த சிறப்பு பயிற்சி முகாம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன உயிரியல் விரிவாக்க மைய அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட தீயணைப்பு துறை மீட்பு பணிதுறை அலுவலர் கணேசன்,உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மணிகண்டன், வனச்சரக அலுவலர்கள் செல்லமணி, பால்பாண்டியன் தலைமை வகித்தனர்.
இந்நிகழ்வில் மலை பகுதிகளில் இயற்கை சூழ்நிலையில் தீ பற்றுவது அல்லது மனிதர்களின் எதிர்பாராத செயல்களால் தீ பற்றுவது குறித்து விளக்கமளித்தனர். பின்னர் பற்றிய தீயை எவ்வாறு எதிர் நோக்கி எளிதில் அணைப்பது என்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.இதில் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாமில் சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட அலுவலர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.