ஸ்ரீவில்லிபுத்தூர்- அம்பேத்கர் சிலை முன்னர் வைக்கப்பட்ட பேனர் கிழிப்பு - பதட்டம்

கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது என்ற வாசகம் அடங்கிய அம்பேத்கர் பேனர் கிழிக்கப்பட்டது

Update: 2021-06-02 13:34 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அம்பேத்கார் சிலை முன்பு கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது என்ற வாசகம் அடங்கிய அம்பேத்கர் பேனர் கிழிக்கப்பட்டது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பகுதியில் கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது என்ற வாசகம் அடங்கிய அம்பேத்கார் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனை மர்ம நபர்கள் இருவர் கிழித்து இருசக்கர வாகனத்தில் சாலையில் இழுத்து சென்றாக கூறப்படுகிறது. அம்பேத்கர் பேனரை கிழித்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி காவல்துறையினரிடம் கிராம மக்கள் முறையீடு செய்துள்ளனர். இதனிடையே அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

பதட்டமான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் 100    க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News