ஸ்ரீவில்லிபுத்தூரில் 60 வயது முதியவர் வெட்டிக்கொலை - பரபரப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில், 60 வயது முதியவரை வெட்டிக் கொன்று விட்டு தப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் குலாலர் தெருவில் வசித்து வந்தவர் கூலி தொழிலாளி கருப்பையா, வயது 60 . அவர் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்கள், அவரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். கருப்பையாவின் உறவினர்கள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அழைப்பை ஏற்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், நேரில் சென்று பார்த்தபோது படுகொலை செய்யப்பட்டு வீட்டில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதியவர் கருப்பையா கொலை செய்யபட்டது எப்போது, எதற்காக கொலை நடந்தது என்று, பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தனிப்படை அமைத்தும் தேடி வருகின்றனர்.