ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ அதிமுகவில் இருந்து விலகல்
ஸ்ரீ வில்லிபுத்தூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கட்சியில் இருந்து விலகினார்.
துவக்க காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்த்த பொண்ணு பாண்டியன் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் ஆட்சி நிறைவடையும் தறுவாயில் 2016ம் ஆண்டு அப்போதையை முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதிமுகவின் மாவட்ட செயலாளராக உள்ள அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தேர்தல் பொறுப்புக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணியை மேற்கொள்ள அனுமதிக்காமல் தங்களை உதாசீனப்படுத்துவதாக குற்றம் சாட்டினார். அரசியலில் மிக முக்கியமானது தேர்தல் மட்டும் தான். அத்தகைய தேர்தல் களத்தில் கூட பணி செய்ய விடவில்லை என்றால் இந்த இயக்கத்தில் இருப்பதில் அர்த்தமே இல்லை.
இன்னும் பல முக்கிய நிர்வாகிகள் இந்த இயக்கத்தை விட்டு வெளியேறுவதால் அதிமுகவிற்கு இந்த மாவட்டத்தில் பின்னடைவு நிச்சயமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.