ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து முன்னணியினர் சார்பில் விநாயகருக்கு சிறப்பு பூஜை
விருதுநகர் மாவட்டம் ராமகிருஷ்ணாபுரம் நடுத்தெருவில் இந்து முன்னணியினர் சார்பில் விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.;
ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் நடுத்தெருவில் இந்து முன்னணியினர் சார்பில் விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனையடுத்து விநாயகர் சிலை அருகில் உள்ள ஆனந்த விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்ல முற்பட்டபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்டத் துணைக் காவல் கண்காணிப்பாளர் மாரிராஜன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்து முன்னனியினர் விநாயகர் சிலையை தெருவின் நடுப்பகுதியின் வீதியில் வைத்து பஜனை செய்து வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.