வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் பரமபத வாசல் திறப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் இன்று காலை பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-01-13 07:11 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் இன்று காலை பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று பரமபத வாசல் திறக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் இன்று காலை பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலானது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் மார்கழி உற்சவமானது கடந்த 3ஆம் தேதி பச்சை பார்த்தல் நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது.

தொடர்ந்து அன்று முதல் பகல்பத்து உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் பகல்பத்து உற்சவம் நேற்று நிறைவு பெற்றது.இராப்பத்து உற்சவம் இன்று ஆரம்பமான நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் திறக்கப்பட்டது. முன்னதாக கொரோணா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று காலை 4 மணி முதல் பக்தர்கள் யாருக்கும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து காலை 7.35 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக ஆழ்வார்கள் எதிர்கொள்ள ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் வெளியே வந்தனர். இதனையடுத்து 8 மணிக்கு மேல் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் அனைவரும் 8 மணிக்கு மேல் சொர்க்கவாசல் வழியாக வெளியே வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியினை தொடர்ந்து ஆண்டாள் கோவில் வளாக பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News