குத்தகை முடிந்து காலி செய்யவில்லை: வட்டாட கல்வி அலுவலகத்திற்கு பூட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு நகராட்சி நிர்வாகத்தினர் பூட்டு போட்டதால் பல மணி நேரம் வெளியில் காத்திருந்த ஊழியர்கள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார கல்வி அலுவலகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே செயல்பட்டு வருகிறது .இந்த அலுவலகத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் வரையறைகள் மற்றும் பதினையாயிரம் மாணவர்களின் விவரங்கள் இங்கு பராமரிக்கப்படுகிறது. இந்த கட்டிடம் நகராட்சிக்கு சொந்தமானது. இதில் தனி நபர் ஒருவர் குத்தகை எடுத்து வாடகை முறையில் கல்வி அலுவலகம் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் குத்தகை முடிந்து பல மாதங்கள் ஆனதால் வட்டார கல்வி அலுவலகத்தை காலி செய்யும்படி நகராட்சி அதிகாரிகள் பலமுறை கூறியதாக கூறப்படுகிறது.தொடர்ந்து காலி செய்யப்படாததால் இன்று நகராட்சி நிர்வாகத்தினர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.
இதனால் இதில் பணிபுரியும் ஊழியர்கள் வெளியில் அமர்ந்து பணியில் ஈடுபட்டனர்.ஒரு சில பணிகளுக்காக வந்த ஆசிரியர்கள் திரும்பிச்செல்லும் நிலை ஏற்பட்டது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் நகராட்சி இடையே இனக்கமான சூழ்நிலை இல்லாதது இத்தகைய நடவடிக்கைக்கு காரணம் எனவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது..
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சி தொடக்கப் பள்ளி கட்டிடம் மாணவர்கள் இல்லாமல் செயல்படாமல் உள்ளது இந்த அலுவலகத்தை தொடர்ந்து 6 வருடங்களாக கேட்டு வருகிறோம். தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை நிரந்தர கட்டிடம் இல்லாமல் வருடம் வருடம் இடம் மாறும் சூழ்நிலையை உள்ளது என்றும் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.