பதுக்கி வைக்கப்பட்ட 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்

Update: 2021-04-04 04:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடை விடுமுறை எதிரொலியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாளை முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக மதுப்பிரியர்கள் மற்றும் கள்ளச்சந்தையில் மது பாட்டில்களை விற்பவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் போலீசார் தனிப்படை அமைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவாேரை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1500 மது பாட்டில்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மது பாட்டில்களை முறைகேடாக பதுக்கிய குருசாமி, ராமர் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் கணேசன் என்பவரை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News