ஸ்ரீவில்லிபுத்தூர் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை: 1008 கலச அபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு 1008 கலச அபிஷேகம் நடைபெற்றது.

Update: 2021-12-27 13:21 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு 1008 கலச அபிஷேகம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஐயப்பன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் சார்பில் 53வது மண்டல பூஜை அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 40 நாட்களுக்கு மேலாக தினமும் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. மண்டல பூஜையான இன்று ஸ்ரீ ஐயப்பனுக்கு 1008 கலசாபிஷேகம் மற்றும் 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக நேற்று யாகசாலை பூஜையுடன் துவங்கிய மண்டலாபிஷேகம், இன்று காலையில் யாகசாலை நிறைவுபெற்றது. மூலவர் மற்றும் உற்சவர் விக்கிரகங்களுக்கு சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட 1008 கலசங்கள் மற்றும் 108 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால்,  ஐயப்ப விக்ரகங்களுக்கு பக்தர்களின் சரண கோஷங்களுக்கு மத்தியில் அபிஷேகம் செய்யப்பட்டது.

பூஜையின் முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News