வத்திராயிருப்பில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கக்கோரி வத்திராயிருப்பில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
வத்திராயிருப்பு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசு ஊழியர்களின் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.