போலி நிருபருக்கு 17 ஆண்டுகள் சிறை: ஸ்ரீவில்லிபுத்துர் நீதிமன்றம் தீர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் போலி நிருபருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

Update: 2022-02-25 13:43 GMT

17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட போலி நிருபர் கண்ணன் என்கிற விஜய கண்ணன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் போலி நிருபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவியை கடத்தி சென்ற வழக்கில் போலி நிருபர் கண்ணனுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2016ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தேர்வில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றதையடுத்து அவரின் படங்கள் அனைத்து நாளிதழ்களிலும் வெளியாயின.

அதனைப் பார்த்த விருதுநகரைச் சேர்ந்த கண்ணன் என்கிற விஜய கண்ணன் அருப்புக்கோட்டைக்கு சென்று மாணவியின் பெற்றோரிடம் தான் மத்திய அரசாங்க தொலைக்காட்சியின் (பொதிகை) நிருபர் என்று அறிமுகமாகி கொண்டு முதலிடம் பெற்ற மாணவிக்கு கலெக்டரிடம் சொல்லி பணம் வாங்கி தருவதாக விருதுநகர் அழைத்து வந்து தொடர்ந்து அவரை அங்கிருந்து மதுரை அழைத்துச் சென்று பின் பேருந்தில் திருச்செந்தூர் அழைத்துச் சென்றுள்ளார்.

மாணவியை காணாமல் தவித்த பெற்றோர் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்த போலீசார் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் கண்ணன் என்கிற விஜய கண்ணன் மீது விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று கண்ணன் என்ற விஜய கண்ணனுக்கு 7 வருடம் மற்றும் 10 வருட தண்டனை என ஆக மொத்தம் 17 வருடங்கள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிபதி தனசேகரன் தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News